யாழில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பல்கலைக் கழக மாணவி ஒருவர் எரிகாயங்களுடன் மீட்க்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும், பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்த செய்தியையும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதற்கு எல்லாம் காரணம் காதல் தான் ! யாழில் தொலைபேசி திருத்தும் நிலையம் ஒன்றில் வேலைபார்த்த இளைஞன் மீது காதல்வயப்பட்டுள்ளார் இந்த பலகலைக்கழக மாணவி துளக்சிக்கா. ஆனால் பல பெண்களைக் காதலித்து, பின்னர் அவர்களை ஏமாற்றும் ஒருவனாக அந்த இளைஞன் இருந்திருக்கிறான். காதல் செய்வதே அவன் பொழுதுபோக்காகவும் இருந்திருக்கிறது.காதல்வயப்பட்ட துளக்சிக்காவோடு சில நாட்கள் பழகிவிட்டு, அவளை ஏமாற்றியுள்ளார் குறிப்பிட்ட இளைஞர். சோகம் தாளாது அவர் தீக்குழித்துள்ளார். கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான துளக்சிக்கா பின்னர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். ஒரு சேலை இல்லையேல் பஞ்சாபி வாங்குவது என்றால் கூட நூறு கடை ஏறி இறங்கும் பெண்கள், காதலனை தெரிவு செய்வதில் மட்டும் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுக்கிறார்களோ தெரியவில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக