திங்கள், 28 ஜனவரி, 2013

News Serviceயுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்மாணிக்கப்படும் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படாமல் , அரச ஆதரவாளர்களுக்கும் , அரசியல்வாதிகளின் உறவினர்களுக்குமே வழங்கப்படுகின்றது. இது அநீதியான செயலாகும் என்று மனத்தாங்கலுடன் கூறினார் மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் அடிகளார். இன்றைய வன்னி மாவட்ட மக்களின் நிலைகுறித்தும் ,யுத்தம் முடிவுபெற்று நான்கு வருடங்களாகியும் மக்கள் படும் துன்பங்கள் குறித்தும் அவர் விபரிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மேலும் இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் வன்னி மாவட்டத்தில் 3000 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் மந்தகதியில் செயற்பட்டு வரும் இந்தத் திட்டத்தில் நிர்மாணிக்கபடும் வீடுகள் உண்மையாக பாதிக்கப்பட்டு உயிர்களை இழந்து, இன்னும் காடுகளிலும் , மழையிலும் தண்ணீரிலும் அல்லல்படும் மக்களுக்கு வழங்கப்படாமல் , எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாத மக்களுக்கும் ,சமூகத்திற்கும் ,பிற இடங்களிலிருந்து அண்மையில் குடியேற்றப்பட்ட பேரினவாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அரசியல்வாதிகளின் துணையோடும் ,படையினரின் வழிகாட்டல்களிலும் பகிர்ந்தளிப்பதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக