பிரபல காமுக நீதிபதியும் சிறிலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசரும் , தமிழின விரோதியும் மஹிந்தையருடன் கடுமையான முரண்பாட்டைக் கொண்டவருமான சரத் என். சில்வாவை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் உள்வாங்கி அவருக்கு நீதியமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக அரச சார்பு சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்தே அவருக்கான வெகுமதியாக மஹிந்த அரசு எம். பி பதவியையும் அமைச்சுப் பொறுப்பையும் வழங்கவுள்ளது.
அத்துடன் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வில் சிறிலங்கா அரச தரப்புக்கு சரத் என். சில்வாவே தலைமை தாங்கவுள்ளார் என்றும் அந்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக