ஞாயிறு, 20 ஜனவரி, 2013

அமைச்சரவையில் பாரிய மாறங்கள்; குடும்ப ஆட்சிக்கு முக்கியத்துவம்

amahinthaஎதிர்வரும் சில வாரங்களுக்குள் சிறிலங்காவின் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அவை தற்காலிகமாகப் பின்போடப்பட்டிருந்தமை தெரிந்ததே.
தற்போதைய மாற்றத்தின்படி பல்வேறு அமைச்சுகளின் பொறுப்புகள் கைமாறப்படவுள்ளன. இதன்படி அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, மின்சக்தி, எரிசக்தி அமைச்சு, பெற்றோலிய வளத்துறை அமைச்சு என்பவை தற்போதைய அமைச்சர்களிடமிருந்து பறிக்கப்படவுள்ளன என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்போதைய சபாநாயகரும் ஜனாதிபதி மஹிந்தையரின் அண்ணனுமான சமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் ­ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக