புதன், 23 ஜனவரி, 2013

இலங்கைக்க எதிராக அமெரிக்கா பாயும்?; ஜெனிவா மாநாட்டில் பிரேரணை வரும்

newsஇராஜதந்திர முன்னேற்பாடுகளை இப்போதே அமெரிக்கா முடுக்கிவிட்டிருப்பதாக அறியமுடிகின்றது. ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான மிக முக்கிய தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது.
இதற்கான இராஜதந்திர முன்னேற்பாடுகளை இப்போதே அமெரிக்கா முடுக்கிவிட்டிருப்பதாக அறியமுடிகின்றது.இதன்படி மார்ச் மாத கூட்டத்தொடரில் பங்கேற்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கை தொடர்பில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும், மார்ச் மாத மாநாட்டில் அது தொடர்பில் பிரேரணையொன்று கொண்டுவரப்படும் சாத்தியம் தொடர்பிலும் ஜெனிவாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இராஜதந்திர மட்டத்தில் முன்னறிவித்தலை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை தொடர்பில் இந்த முறை ஜெனிவா மாநாட்டில் மூன்று நாள்கள் தனித்தனி அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இறுதி நாள் விவாதம் மார்ச் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆகையால் மார்ச் 15ஆம் திகதியளவிலேயே அமெரிக்கா தனது பிரேரணையை முன்மொழியுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன்போது சமர்ப்பிக்கப்படவுள்ள அமெரிக்காவின் பிரேரணைக்கு தற்போது இறுதி வடிவம்கொடுக்கும் முயற்சிகள் முடிவடைந்து விட்டதாக அமெரிக்க இராஜதந்திர உயர்மட்ட வட்டாரங்கள் நேற்று "உதயனி'டம் உறுதிப்படுத்தின


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக