யுத்தத்தை அரசாங்கம் வெற்றி கொண்டுள்ள போதும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை என யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் குழுவிடம் எடுத்துரைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் திருமதி கிறிஸ்ரின் றொபின்சன் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு யாழ். ஆயரையும், மாவட்டச் செயலரையும் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே ஆயர் மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் யாழ்.மக்கள் எவ்வாறான மனோநிலையில் உள்ளனர். சுதந்திரமாக செயற்படும் நிலையுள்ளதா? அவர்களுக்குத் தற்போதுள்ள பிரச்சினை என்ன என்பன தொடர்பாக கேட்டறியவே தாம் வந்ததாக பிரான்ஸ் தூதுவர் குழு சுட்டியுள்ளது.
இதற்குப் பதிலளித்த யாழ். ஆயர் தொழில் பிரச்சினைகள், மற்றும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு போன்றன இன்னமும் இழுபறி நிலையிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்கள் இன்று தமக்குள்ள பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தீர்வுகளை தேடாமல் ஒரு தீர்வாக தமக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என கூறினார். இதனையடுத்து வடக்கில் தற்போது இனங்களுக்கிடையிலான நல்லுறவு எப்படியுள்ளது என்பது தொடர்பிலும் பிரான்ஸ் தூதுவர் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த ஆயர் நல்லிணக்கம் முழுமையாக ஏற்படவில்லை எனவும் அதனை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும். நடவடிக்கைகள் போதுமானவளவில் இல்லையெனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக