வியாழன், 10 ஜனவரி, 2013

மேர்வின் சில்வாவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை?

பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவல கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அமைச்சரின் நாடாளுமன்ற இணைப்புச் செயலாளர் சிங்கப்பூர் சரத் உள்ளிட்ட ஐந்து பேர், கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனரழங்கிய பதவிகளை ரத்து செய்வதாக அமைச்சர் மேர்வின் சில்வா அறிவிப்பு தம்மால் வழங்கப்பட்ட பதவிகளை ரத்து செய்வதாக அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அரசியல் மற்றும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் கம்பாஹ மாவட்ட தேர்தல் தொகுதியின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு விசேட பதவிகள் வழங்கியிருந்தேன்.
இதற்கான விசேட அடையாள அட்டைகளையும் விநியோகித்திருந்தேன். எனினும், இந்த அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி சிலர் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்.
இணைப்புச் செயலாளர், இணைப்பாளர் மற்றும் ஆலோசகர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டிருந்தன.கடந்த 9ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சகல பதவிகளையும் ரத்துச் செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக