சனி, 26 ஜனவரி, 2013

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஸ்ஸும் ஊக்கமளித்தார் - ஜனாதிபதி!

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்குமாறு அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஸ் டபிள்யூ புஸ் தம்மிடம் தனிப்பட்ட ரீதியில் ஊக்கமளித்ததாக இலங்கையின் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதர் பெற்றீசியா பியூட்டினியஸ் இலங்கையில் பதவியேற்ற பின்னர் 2009ம் ஆண்டு ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார். இதன்போது தமது கருத்தை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, விடுதலைப்புலிகளை தோற்கடிக்குமாறு அமெரிக்கா தமக்கு ஊக்கமளித்தது.


அதேநேரம் தற்போது இடம்பெயர்ந்தோர் விடயத்தில் அந்த நாடு தம்மை விமர்சிக்கிறது என்று குறிப்பிட்டார். போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறி அமெரிக்கா தமக்கு மற்றும் நாட்டுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதையும் மஹிந்த ராஜபக்ச, பெற்றீசியாவிடம் முறைப்பாடாக தெரிவித்துள்ளார். இதனை பெற்றீசியா, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக