சனி, 26 ஜனவரி, 2013

யாழ். பல்கலைக்கழக மாணவி எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்

. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உடல் எரியுண்ட நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவி எரிகாயங்களுடன் மீட்புஇன்றைய தினம் 26 ஆம் தேதி காலை எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் எஸ். துளசிக்கா, வயது 22, என்ற மாணவியே இவ்வாறு எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் முழுவதும் தீக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். புகையிரத நிலைய வீதியில் எரியுண்ட நிலையிலிருந்த குறித்த மாணவியை மீட்டுள்ள இப்பகுதி மக்கள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் யாழ். பொலிஸாருக்கும் தவகல் வழங்கியுள்ளனர்.

என்ன நடந்தது? என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக