ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தின் இழப்பானது தொடர்ந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரிச் சலுகை இழக்கப்பட்டதன் காரணமாக தொடர்ந்தும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்து வருகின்றனர்.
சிறிலங்காவிடமிருந்து பறிக்கப்பட்ட ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தின் நலன்களை பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டுள்ளதனால் சிறிலங்காவின் நலன்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 2ம் திகதி இந்தச் சலுகைத் திட்டத்தின் மூலம் நலன் பெற்று வந்த இரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த சலுகைத் திட்டத்தின் மூலம் நன்மை பெற்றுக் கொண்ட பலர் பாதக விளைவுகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டமையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக