வியாழன், 31 ஜனவரி, 2013

வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த கோரி சகோதரத்தவத்திற்கான மக்கள் அரண் குரல்

வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தகோரி சகோதரத்தவத்திற்கான மக்கள் அரண் எனும் அமைப்பு வவுனியா பஸ் நிலையத்திற்கு மன்னால் இன்று (31) காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தது.

வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை உறுதி செய், சட்டவிரோத கைதுதுகள் கடத்தல்களை உடனடியாக நிறுத்து, வடக்கில் நடத்தும் காணி அபகரிப்பை உடன்நிறுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய், கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய் எனும் கோசங்கைள எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் கந்தன்நெத்தி, முன்னாள பாராளுமன்ற உறுப்பினர் இரா. சந்திரசேகரன் உட்பட சகோதாரத்துவத்திற்கான மக்கள் அரணின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த கோரி சகோதரத்தவத்திற்கான மக்கள் அரண் குரல் (படங்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக