வியாழன், 31 ஜனவரி, 2013

இலங்கை விவகாரம் குறித்து கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழ் அமைப்புக்கள் கலந்துரையாடல்

News Serviceஉலக தமிழ் அமைப்புக்கள் ஜெர்மனியின் பேர்ளின் நகரில் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளும், க்ளோபல் தமிழ் போரம் போன்ற சர்வதேச அமைப்புக்களும், புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். கடந்த 26ம், 27ம் திகதிகளில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கை வாழ் தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அடையாளங்களை சிதைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக