சம்மாந்துறை மல்வத்தை பிரதேசத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மல்லிகைத்தீவு வீதியல் இன்று (28) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடள் அவரின் கைவிரல்கள்களை வெட்டி மோதரம் மற்றும் கையடக்கத் தொலைபேசி, என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் மல்வத்தை 2ம் பிரிவு புதுநகரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி பிரேமநாதன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மல்வத்தை பிரதேசத்தில் தனது வீட்டில் இருந்தபோது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மல்லிகைத்தீவு பிரதேசத்திற்கு வாடகைக்கு ஆட்டோவை வருமாறு கூறி கையடக்க தொலைபேசிக்கு அழைப்பென்று வந்துள்ளது.
இதனை அடுத்து ஆட்டோவை எடுத்துக் கொண்டு அவர் மல்லிகைத்தீவு பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.
இவ்வாறு சென்றவர் மல்லிகைத்தீவு மயானத்துக்கு அருகில் வீதியில் இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு கைகள் மற்றும் கழுத்துகள் வெட்டப்பட்ட நிலையில் ஆட்டோவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்வரின் கைவிரல்களை வெட்டி மோதிரம் மற்றும் கையடக்கத் தொலைபேசி, பேஸ், என்பன கொள்ளையடிக்கப்பட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக