சர்வதேச தீவிரவாத அமைப்புக்களான அல்கைதா, ஜிஹாத் மற்றும் தலிபான் போன்றவற்றுடன் தொடர்புகளை பேணும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களை தண்டிக்கு புதிய சட்டமூலம் உருவாக்கப்படவுள்ளது.குறித்த அமைப்புகளுடன் தொடர்புகளை பேணும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனையும் பத்து இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கும் வகையிலான புதிய சட்டமூலம் ஒன்றை நடைமுறைப்படுத்த கோத்தபாய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தற்போது சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உள்ளனர்.
இவ்வாறானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கொள்கையோடு சிறிலங்கா அரசு இணங்கிச் செயற்படுவது என்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தப் புதிய சட்டமூலம் சிறிலங்கா பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் பெற்றப்பட்டதும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக