திங்கள், 21 ஜனவரி, 2013

அச்சுறுத்தலினால் அடிப்பணியமாட்டோம் – சட்டத்தரணிகள்

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க சார்பில் செயற்பட்ட சட்டத்தரணிகளுக்கு இனம்தெரியாத நபர்களினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் கண்டனத்தை தெரிவித்தும் இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கோரியும் இன்று சட்டத்தரணிகளினால் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த கையெழுத்து வேட்டை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது சட்டத்தரணிகள் குறித்த அச்சுறுத்தல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமது கையெழுத்துக்களை இட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள் மரண அச்சுறுத்தலினைக் கண்டித்து கையெழுத்து நடைபெற்றதாக குறிப்பிட்டனர்.

இது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாகவும், இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் தங்களை அடிப்பணியச் செய்ய முடியாது எனவும், தாம் தொடர்ந்தும் உத்வேகத்துடன், மக்களுக்காகவும், நீதிமன்ற சுயாதீனத்திற்காகவும் பாடுபடுவோம் என்றும் குறிப்பிட்டனர்.

இதேவேளை இவ்வாறன அச்சுறுத்தல்கள் எங்கிருந்து பிரயோகிக்கப்படுகின்றன என்பது குறித்து தாங்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், கடந்;த கால அனுபவங்களை வைத்து பார்க்கும் போது இத்தகைய சம்பவங்களுக்கு எத்தகைய விசாரணைகள் நடந்தாலும், இலங்கையில் எத்தகைய நீதியும் கிடைக்கப்போவதில்லை என்பதை தாம் நன்கு அறிந்தள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இருந்தபோதும், இதனை சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்பும் வiகியல் இந்த கையெழுத்து வேட்டையினை நடத்தியதாகவும், மக்களே தமக்கு துணையாக நிறப்பார்கள் என்றும் சட்டத்தரணிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.

அத்துடன் புதிய நீதியரசரின் வரவேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளவதில்லை என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக