சனி, 5 ஜனவரி, 2013

பாராளுமன்றத்தினால் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது - சுமந்திரன்
 
News Service பாராளுமன்றத்தினால் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்றையதினம் நீதிமன்றில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற கட்டளையை மீறியுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தார். எனினும் தான் நேற்று நீதிமன்றில் ஆஜரானது சாட்சியளிப்பதற்காக அல்ல எனவும் அதன் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவே எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 
இதேவேளை, சபாநாயகரின் தேவைக்காக அல்லாமல் மக்கள் தேவைக்காகவே பாராளுமன்றில் தாம் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக