கிளிநொச்சி ஆனந்தபுரம் ஐயனார் பாடசாலையில் சீPருடையில் சென்ற ராணுவத்தினர் பாடசாலை அதிபரிடம் மல்லுக் கட்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் இந்தப் பாடச்hலைக்குச் சென்ற ராணுவத்தினர் நேர அட்டவணையை தம்மிடம் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதுடன் தாம் மாணவர்களுக்கு சிங்களம் கற்பிக்கப் போவதாகவும் கோரியுள்ளனர். தொடர்ந்து அதிபருடன் வாக்குவாதம் இடம்பெற்ற போது கல்வித் திணைக்கள அதிகாரிகள் தற்செயலாக பாடசாலைக்கு சென்றுள்ளனர். அங்கு இடம்பெற்ற வாய்மூல தர்க்கங்களின் பின் உரிய அனுமதியின்றி இவ்வாறு பாடசாலைக்குள் நுழைவதை அனுமதிக்க முடியாதென ராணுவத்தினர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் தொடருகின்ற இந்த ராணுவத்தின் இந்த அட்டகாசங்கள் குறித்த விபரமான தகவல்கள் விரைவில்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக