புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், இலங்கை அரசிடம் சரணடைந்த கே.பி என்னும் குமரன் பத்மநாபன் தற்போது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். இலங்கை அரசின் செலவில் முற்றாகப் பராமரிக்கப்பட்டு வரும் இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன் நாள் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீட்டில் தற்போது தங்கியுள்ளார். இலங்கை அரசின் ஆதரவோடு, தொண்டு நிறுவனம் ஒன்றை தாம் நடாத்திவருவதாக கூறிவரும் இவர், சமீபத்தில் அரச செலவில் மலேசிய சென்று வந்துள்ளார் என்ற செய்திகள் கசிந்துள்ளது. விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பல கோடி அமெரிக்க டாலர்களை, இவர் கோட்டபாயவுக்கு கொடுத்துள்ளார் என்றும், புலிகளுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளின் விபரங்கள் இவரிடம் இருப்பதாகவும் இலங்கை அரசு தகவல்களை வெளியிட்டு, சிங்களவர் மத்தியில் செல்வாக்கைப் பெற்றது. இதன் காரணமாகவே தாம் கே.பியை பராமரித்து வருவதாக இலங்கை அரசு சிங்களவர்களுக்கு மத்தியில் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். சமீபத்தில் இரகசியமாக மெலேசியா சென்று, தனது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து திரும்பியுள்ள கேபியின், விமானச் சீட்டு தொடக்கம் உணவுக்கும் சேர்த்து இலங்கை அரசே செலவுகளைப் பொறுப்பேற்றுள்ளது என்றும் மேலும் அறியப்படுகிறது. இலங்கை அரசு தம்மைக் கைதுசெய்யவில்லை என்றும், தாமே இலங்கை அரசிடம் சரணடைந்தேன் என்றும் இவர் அடிக்கடி கூறிவருகிறார். இருப்பினும், இலங்கைப் புலனாய்வுத் துறையினர் மலேசியாவரை சென்று ஒரு பாரிய ஆப்பரேஷனில் ஈடுபட்டே கே.பியைக் கைதுசெய்தனர் என்று சிங்களவர்கள் மத்தியில் பலத்த பேச்சு அடிபட்டுவருகிறதுதீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
புதன், 2 ஜனவரி, 2013
இரகசியமாக மலேசிய சென்று திரும்பிய கே.பி
புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், இலங்கை அரசிடம் சரணடைந்த கே.பி என்னும் குமரன் பத்மநாபன் தற்போது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். இலங்கை அரசின் செலவில் முற்றாகப் பராமரிக்கப்பட்டு வரும் இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன் நாள் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீட்டில் தற்போது தங்கியுள்ளார். இலங்கை அரசின் ஆதரவோடு, தொண்டு நிறுவனம் ஒன்றை தாம் நடாத்திவருவதாக கூறிவரும் இவர், சமீபத்தில் அரச செலவில் மலேசிய சென்று வந்துள்ளார் என்ற செய்திகள் கசிந்துள்ளது. விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பல கோடி அமெரிக்க டாலர்களை, இவர் கோட்டபாயவுக்கு கொடுத்துள்ளார் என்றும், புலிகளுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளின் விபரங்கள் இவரிடம் இருப்பதாகவும் இலங்கை அரசு தகவல்களை வெளியிட்டு, சிங்களவர் மத்தியில் செல்வாக்கைப் பெற்றது. இதன் காரணமாகவே தாம் கே.பியை பராமரித்து வருவதாக இலங்கை அரசு சிங்களவர்களுக்கு மத்தியில் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். சமீபத்தில் இரகசியமாக மெலேசியா சென்று, தனது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து திரும்பியுள்ள கேபியின், விமானச் சீட்டு தொடக்கம் உணவுக்கும் சேர்த்து இலங்கை அரசே செலவுகளைப் பொறுப்பேற்றுள்ளது என்றும் மேலும் அறியப்படுகிறது. இலங்கை அரசு தம்மைக் கைதுசெய்யவில்லை என்றும், தாமே இலங்கை அரசிடம் சரணடைந்தேன் என்றும் இவர் அடிக்கடி கூறிவருகிறார். இருப்பினும், இலங்கைப் புலனாய்வுத் துறையினர் மலேசியாவரை சென்று ஒரு பாரிய ஆப்பரேஷனில் ஈடுபட்டே கே.பியைக் கைதுசெய்தனர் என்று சிங்களவர்கள் மத்தியில் பலத்த பேச்சு அடிபட்டுவருகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக