பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் ஐ.நாவின் கருத்துக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளது. நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் கெப்பிரியல்லா கனூல், இலங்கையின் சட்டத்துறை மீறல்கள் குறித்து கண்டனம் வெளியிட்டிருந்தார். வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிசினால் இதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட குற்றவியல் பிரேரணை தேசிய ரீதியாக நடைமுறையிலுள்ள பிழையற்ற செயற்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்படியான தருணங்களில் அதிகாரம் கொண்டு சட்ட ஒழுங்குகளுக்கு இந்த பிரேரணை உட்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக