திங்கள், 7 ஜனவரி, 2013

பிரதம நீதியரசருக்கே நீதி பெற்றுக் கொடுத்த தமிழன்

imagesபிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை இரத்துச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சட்டவலுவற்றது என உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் நோக்குடன் அரசாங்கம் கொண்டுவந்த கண்டனத் தீர்மானம் மீதான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.ஷிராணி பண்டாரநாயக்க தாக்கல்செய்திருந்த மனு மீதான தீர்ப்பின்போதே நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. தலைமை நீதியரசர் மீதான பல குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் விதத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.ஆனால் இந்தத் தெரிவுக்குழு விசாரணை நீதியாக நடக்கவில்லை என்று அந்தக் குழுவில் இருந்த எதிரணி உறுப்பினர்கள் அந்த அறிக்கையை நிராகரித்திருந்தார்கள். நாடாளாவிய மட்டத்தில் சட்டத்தரணிகளும் தெரிவுக்குழு அறிக்கை தவறானது என்று எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள்.இதேவேளை, ஷிராணி பண்டாரநாயக்க மீதான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ சிறப்பு சுயாதீனக் குழுவொன்றை அமைத்துள்ளதாக அரச ஊடகம் இன்று அறிவித்துள்ளது.
நீதி மற்றும் நாடாளுமன்ற துறைகளைச் சார்ந்த 4 நிபுணர்கள் இந்தக் குழுவில் அடங்குவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணையை எதிர்வரும் 10ஆம் 11ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் அறிவித்த சற்று நேரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக தகவல் வழங்கிய பிரதம நீதியரசருக்காக வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி நீலகண்டன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சட்டப்படி செல்லுபடி அற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக