ஞாயிறு, 6 ஜனவரி, 2013

நல்லூர் காவலரண் விவகாரம்; செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு மிரட்டல்!

யாழ் நல்லுர் ஆலய முன்றலில் இராணுவத்தினர் நிரந்தர காவலரனை அமைத்தவிடயத்தினை யாழ் ஊடகங்களும் பல இணையங்களும் வெளிக்கொணர்ந்தன. இன்றும் 'நல்லூர் ஆலய சூழலில் இருந்து நகர மறுத்து படையினர் அடம் வேறுபகுதிக்கு காலரனை நகர்த்தினர்' என்ற செய்தி யாழிலிருந்து வெளிவரும் சில பத்திரிகைகளில் வெளிவந்தது. இது குறித்து கோபம் அடைந்த படையினர் நேற்றுக் சில பத்திரிகைக் காரியாலையங்களுக்குச் சென்று அவர்களை கடுமையாக மிரட்டி எந்த அடிப்படையில் இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டது என தமக்கு தெரிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
உயர் மட்ட படை அதிகாரிகள் சகிதம் சென்ற இவர்கள் நல்லூர் ஆலைய அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தாம் காவலரன் அமைத்ததாகவும் அவ்வாறு நாளை செய்திகள் பிரசுரிக்கப்பட வேண்டும் என மிரட்டியதாகவும் எனினும் பத்திரிகை நிர்வாகங்கள் இவ்வாறான செய்தி குறித்து வாய் திறக்க மறுக்கின்ற இந்த நிலையில் நல்லூர் அறங்காலருடன் தொடர்பு கொள்ள முற்பட்ட சில ஊடகவியலாளர்களுக்கு படைத்தரப்பின் அழுத்தம் காரணமாக அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததாக தெரியவருகிறது.குறிப்பாக முதலில் தான் அவ்வாறு கோரவில்லை எனத் தெரிவித்த அவர் கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுகளுக்கு அமைவாக காவலரன் அமைக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். பின்னர் பின்விளைவுகளை சிந்தித்து தன்னை சுதாகரித்துக் கொண்ட அவர் தலதா மாளிகையிலும் படையினர் நிலைகொண்டு உள்ளனரே நல்லூர் கந்தன் ஆலையத்திற்கு வந்தால் மட்டுமா பிரச்சனை என கூறி உங்களை நல்லூர் கந்தன் பார்த்துக் கொள்வார் என பேச்சை நிறுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.இந்த நிலையில் குளம்பிப் போய் உள்ள பத்திரிகைகளில் நல்லூர் கந்தன் ஆலைய காவலரண் குறித்த செய்திகள் நாளை வருமா? இல்லை வரமாட்டாதா என்பதனை காலையே அறிய முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக