புதன், 30 ஜனவரி, 2013

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கத் தயார் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கத் தயார்

douglas_devananda_1வட மாகாண சபைக்கான தேர்தலில் ஆளும் தரப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யின் செயலாளரும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டு வந்த வட மாகாணசபைக்கான தேர்தலை இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்போவதாக கடந்த வருட இறுதியில் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்குச் சாதகமான முறையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று புதன்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு தேர்தல் நடத்தப்படுமானால் அதில் முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் போட்டியிடுவீர்களா? எனக் கேட்கப்பட்டது.அதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய செய்தியாளர் மகாநாட்டுக்கும் உங்கள் கேள்விக்கும் எந்தவிதமான தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
என்றாலும் உங்கள் கேள்விக்கு நான் பதிலளித்தாக வேண்டும். வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் நான் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படுமானால் கட்டாயம் போட்டியிடுவேன் எனப் பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக