பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் எவை என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே கேள்வி எழுப்பியுள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை மீறிச் செயற்பட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என பாலித கொஹணே சர்வதேச சமூகத்திடம் கோரியுள்ளார். ஆயுத போராட்டங்களின் மூலம் அடைய முடியாத இலக்குகளை, புலி ஆதரவு அமைப்புக்கள் வேறும் வழிகளில் அடைவதற்கு முனைப்பு காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு பாதுகாப்புப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதலாவது அமர்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை பாரியளவில் அனுபங்களையும் அறிவையும் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வேறும் வழிகளில் பிரிவினைவாதத்தை தூண்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நிதி திரட்டல் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பாலித கொஹணே தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக