ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்hளர்.
யானைச் சின்னத்தில் போட்டியிட்டு ஆளம் கட்சியில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களித்த சகல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாட்டின் அரசியல் சாசனத்தை பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள் எனவும், அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக