ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை பணி நீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நம்பிக்கையி;ல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.பிரதம நீதியரசரை பதவி விலக்குவதனைத் தவிர வேறும் வழி கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் சில நாட்களில் பிரதம நீதியரசர் பணி நிக்கம் செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
உச்ச நீதிமன்ற நீதவான்களான ஷிரானி திலகவர்தன, காமினி அமரதுங்க, சலீம் மர்சூக், சத்யா ஹெட்டிகே, ஐ.இமான், கே. ஸ்ரீபவன் ஆகியோரும் முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி சில்வாவும் பிரதம நீதியரசர் பதவியை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக