புதன், 30 ஜனவரி, 2013

அழுத்தங்கள் எமக்குப் புதியவையல்ல – G.L பீரிஸ்


அனைத்துலக அழுத்தங்கள் எல்லாம் எமக்குப் புதியவையல்ல என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தங்காலையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சவால்கள் என்பது வாழ்க்கையிலும், ஆட்சியிலும் அவசியமான ஒரு பகுதி.

சிறிலங்கா அரசாங்கம் தனது எண்ணங்களையும் திட்டங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதற்கு எப்போதுமே தயாராக உள்ளது.

ஏனென்றால், இந்த அரசாங்கத்தின் ஒட்டுமோத்த பலமே மக்கள் தான்.

போரின் முக்கியமான இறுதிக்கட்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த பலம்வாய்ந்த சக்திகள் முயற்சித்தன.

அப்போது நாட்டின் அரசியல் தலைமை பணிந்து போயிருந்தால், இன்றைக்கும் அழிவுகள் தொடர்ந்திருக்கும்.

தீவிரவாதம் அழிக்கப்பட்ட பின்னர் எமக்கான பொருளாதார சலுகைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இப்போது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிகளில் தடைகளை ஏற்படுத்த மனிதஉரிமைகளை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

இந்தச் சவால்களை முறியடிக்கும் தைரியம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது.

போரின் உச்சக்கட்டத்தில் எதிர்கொண்ட சவால்களுக்கு இது சற்றும் குறைவானதல்ல. இதில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை.

இன்று அனுபதவிக்கும் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் அரசாங்கத்தைச் சுற்றி கவசமாக இருக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக