புதன், 16 ஜனவரி, 2013

அமெரிக்க விஜயம் குறித்து இந்த வாரத்தில் TNA தீர்மானிக்கும்

அமெரிக்காவிற்கு விஜயம் செய்வது குறித்து இந்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தீர்மானிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க விஜயம் தொடர்பில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அமெரிக்க விஜயம் குறித்து இந்த வாரத்தில் TNA தீர்மானிக்கும்
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவில் மருத்தவ சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் அவர் நாடு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது, எதிர்வரும் வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ள நிகழ்வில் சம்பந்தன் பங்கேற்பார் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிகழ்வின் போது அமெரிக்க விஜயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

குறிப்பாக இந்த விஜயத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் பற்றி தீர்மானம் எடுக்கப்பட உள்ளது. அரசியல் தீர்வுத் திட்டம், யுத்த இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் குறித்து அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. 2011ம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக