புதன், 16 ஜனவரி, 2013

அரசுக்கு நெருக்கடிகள் அதிகரிப்பு! அமெரிக்காவும் எச்சரிக்கை!

united-states-of-america-flag-HD_wallpapersஇலங்கையில் பிரதம நீதியரசரை பதவிவிலக்கிய செயற்பாடு முதலீடுகளை கவரும் இலங்கையின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரதமநீதியரசரின் பதவிவிலக்கல் இலங்கையின் ஜனநாயக ஆரோக்கியத்தின் மீது கேள்வியை எழுப்பியுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நூக்லன்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவின் பதவிவிலக்கல் விடயத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு நேற்றைய இடம்பெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக