13ம் திருத்தச் சட்டத்தின் சகல அதிகாரங்களும் மாகாணசபைகளுக:கு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என மாகாண முதலமைச்சர்கள், அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.மாகாண முதலமைச்சர்கள் மாநாடு பதுளையில், ஊவா மாhண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.இந்த மாநாட்டின் போது 13ம் திருத்தச் சட்டத்தின் சகல அதிகாரங்ளையும் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது,13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அனைத்து அதிகாரங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீட் ஏ மஜீட் தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டின் தற்போதைய நிலையமைகளைக் கருத்திற் கொண்டு காவல்துறை அதிகாரங்களை கோருவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.காணி தொடர்பில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக