தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்கவை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொலை செய்ததாக ஜனாதிபதி தெரிவித்தார் என புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய தெரிவித்துள்ளதாக கொலம்போ ரெலிகிராப் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, லசந்தவின் சகோதரர் லால் விக்ரமதுங்கவிடம் இதனை மூன்று தடவைகள் தெரிவித்துள்ளதாக உவிந்து குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலை உவிந்து குருகுலசூரிய, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற விசேட சொற்பொழிவொன்றில் நவனீதம்பிள்ளை பங்கேற்றுள்ளார். ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சந்தர்ப்பம் கிடைத்தால் தெரிவிக்குமாறு தம்மிடம் லால் விக்ரமதுங்க கோரியதாக, உவிந்து குறிப்பிட்டுள்ளார். லசந்த கொலை தொடர்பில் விசாரணை நடாத்துமாறு லால் விக்ரமதுங்க கோரிய கடிதமொன்றை, உவிந்து குருகுலசூரிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் ஒப்படைத்துள்ளதாக கொலம்போ ரெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த மாதம் உவிந்து எழுதிய விடயம் முக்கியமாக இங்கு நோக்கத்தக்கது. இதேவேளை, இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக