செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மார்ச் 5ல் சிங்கள தூதரகம் முற்றுகை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்

   மார்ச் 5ம் தேதி சிங்கள தூதரகத்தை முற்றுகையிட போவதாக டெசோ சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது. டெசோ அமைப்பு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11.15 மணிக்கு தொடங்கியது.

இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதி தலைமை வகித்தார். அமைப்பின் உறுப்பினர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ஆர்.பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் பற்றியும், இலங்கையில் நிலவிவரும் தற்போதைய நிலவரங்கள், பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூர கொலை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மார்ச் 5ம் தேதி சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடவும், அதே நாளில் பார்லிமென்ட் முன்பு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக