தமிழகத்திலுள்ள புனித வேளாங்கன்னி மாதா ஆலயத்திற்கு யாத்திரை சென்ற இலங்கையைச் சேர்ந்த 70 பேர் தமிழக பொலிஸாரினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை புனித வேளாங்கன்னி மாதா ஆலயத்திற்கு சென்ற இலங்கை பக்தர்களுக்கு தமிழீழ ஆதரவாளர்களால் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று காலை இலங்கை பக்தர்களுக்கு எதிராக பாரிய எதிர்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக இவர்களை திருப்பி அனுப்ப வேண்டி ஏற்பட்டதாக திருவாரூர் மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் இவ்வாறு இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற பக்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திரும்பி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கை அரசு தமிழ் இன அழிப்பை மேற்கொண்டதாக குற்றஞ்சுமத்தி தமிழக தமிழ் அமைப்புக்கள் இலங்கை சிங்கள மக்கள் மீதும் தலைவர்கள் மீதும் தமது எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளிக்காட்டி விருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக