திங்கள், 11 பிப்ரவரி, 2013

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என மீண்டும் உறுப்பு நாடுகளிடம் கனடா கோரிக்கை!

News Serviceபொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என கனடா மீண்டும் உறுப்பு நாடுகளிடம் கோரியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நீதிமன்றக் கட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக கனடா சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த இரண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்களையும் அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் பொதுநலவாய நர்டுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு புறம்பாக செயற்பட்டு வருவதாக கனடா குற்றம் சுமத்தியுள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் இன்னமும் நடாத்தப்படவில்லை என கனடா குற்றம் சுமத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக