திங்கள், 11 பிப்ரவரி, 2013

ஐ.நா பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் - நாராயணசாமி

ஐ.நா பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் - நாராயணசாமிஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென இந்திய மத்திய அமைச்சர் வீ.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு செய்த பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு முனைப்பு காட்டத் தவறினால், எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த தடவை இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளத் தவறினால் மீளவும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கை வாழ் தமிழர்களை பாதுகாக்கவே மத்திய அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தூர நோக்கின்றி வெறுமனே தீர்மானங்களை நிறைவேற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக