சனி, 2 பிப்ரவரி, 2013

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களுக்கு எதிராக போராட்டம் நடுக்கடலில் நடத்த நேரிடும் - டக்ளஸ் தேவானந்த

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களுக்கு எதிராக போராட்டம் நடுக்கடலில் நடத்த நேரிடும் - டக்ளஸ் தேவானந்தஇந்திய மீனவர்களின் அத்து மீறல்களுக்கு எதிராக போராட்டம் நடுக் கடலில் போராட்டம் நடத்த நேரிடும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மீனவர் பிரச்சினைகள் n;தாடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், போராட்டம் நடத்துவதனைத் தவிர வேறு வழியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் நாள் தோறும் இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.தமிழக மீனவர்களின் அத்து மீறல்களினால் உள்நாட்டு மீனவர்களி; வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்பில் காலத்துக்கு காலம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் காத்திரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட சில வழிமுறைகளில் மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் மீன்வளம் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஐயாயிரம் மீனவர்களுடன் நடுக் கடலில் பாரியளவு போராட்டமொன்றை நடாத்த நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் விரைவில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக