சனி, 2 பிப்ரவரி, 2013

இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றக் காத்திருக்கும் அமெரிக்காவிற்கு பிரிட்டனும் ஆதரவு!

News Serviceஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு பிரித்தானியா ஆதரவு அளிக்கும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரயர் பேர்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று நிகழ்த்திய உரையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இதற்கு, பிரித்தானியா ஆதரவு அளிக்கும் என்று பிரித்தானிய அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ள இரண்டாவது நாடு பிரித்தானியாவாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக