வியாழன், 28 பிப்ரவரி, 2013

யாழில்.கிராம அலுவர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல்! மக்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு கிராம அலுவலர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமையினைக் கண்டித்து நல்லூர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை அரியாலை மக்கள் மேற்கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, அரச அதிபரே ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை, நீதியாக வேலை செய்தவருக்கு அநீதி ஏன், நீதியான விசாரணை செய், உடன் கைதுசெய் தண்டணை வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
கடந்த 14 ஆம் திகதி J/90 கிராம அலுவலர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் பொலிஸாரினால் இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் கைது செய்யப்படவில்லை எனவே சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமா கோரியும் இந்த ஆர்ப்பாட்டத’தை முன்னெடுத்திருந்தனர்.
GS 3இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட வேண்டிய மகஜர் அரச அதிபர் சார்பாக நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில் நந்தனனிடம் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கிராம அலுவலர் தாக்கப்பட்டமைக்கான சட்டநடவடிக்கையினை துரிதமாக மேற்கொண்டு தாக்கியவர்களுக்கான தண்டனையினை வழங்க வேண்டும். இல்லையேல் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்றும் எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற சமபவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமெனவும் என குறித்த மகஜரில் கூறப்பட்டுள்ளது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக