திருமதி சசீந்தினி அவர்களின்
31ம் நாள் கண்ணீர் நினைவுகள்
31ம் நாள் கண்ணீர் நினைவுகள்
ஊர் மகளாய் உத்தமியாய்
பார் புகழும் பைந்தமிழின் நாயகியாய்
கார் குழலாள் கலைமகளாய்
இப் பார் விட்டு மாரித்தாய்
பாதம்தான் சென்றாயோ?
செருத்தனையில் பிறந்தவளே
திருச்சியினில் மறைந்தாயோ
நோய் என்றும் நொடி என்றும்
பாய் தன்னில் படுக்காது
வாய் விட்டு உன் வலியை யாருக்கும் கூறாது மௌனத்தின் மொழியோடு
மண் விட்டுப் போனாயோ?கண் கெட்ட பின்னாலே சூரிய நமஸ்காரம்
கல் வெட்டு எழுதுவதால தீராது நம் சோகம்
சொல் கேட்டு சோகத்தால் துடிக்குது நம் இதயம்
பெரும் சுமையாகி நிற்குது உன் நினைவும்
சுவிசினிலே வாழ வேண்டிய நீ சுருவிலிலே தீயானாய்
கருவினிலே வந்த செல்வம் கனவாகிப் போனதுவோ
இதுதான் விதி என்றால் இனி நாம் என் செய்வோம்
மண் மகளாய் மீண்டும் வந்து மனத்துயரம் ஆற்றையோ?
சகோதரி சுசீந்தினியின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் எம்
குடும்பத்தின் சார்பான ஆழ்ந்த அனுதாபங்கள்
திரு.திருமதி.குமரகுருபரன் குடும்பத்தினர்
நாரந்தனை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக