திங்கள், 25 பிப்ரவரி, 2013

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும்!- இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் அமெரிக்கா கொண்டு வரவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.பிரதம அலுவலக அமைச்சர் வி நாராயணசாமி இந்த தகவலை பாண்டிச்சேரியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.அண்மையில் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன்சி;ங்கை சந்தித்தபோது மன்மோகன்சிங் இதற்கான உறுதிமொழியை வழங்கியதாகவும் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்கு எதிராக இந்தியா செயற்பட வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமையவே மன்மோகன் சிங், இந்தியா, அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக குறிப்பிட்டதாக நாராயணசாமி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக