சிறிலங்கா அரசினது தகவல் ஊடகத்துறை அமைச்சின் இணையத்தளம் மீது இறுதியாக மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலை வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே திட்டமிட்டு மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அரச ஊடக அமைச்சின் செயலர் சரித்த ஹேரத் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் - இதனை நாம் ஒரு சைபர் தீவிரவாத நடவடிக்கையாகவே பார்க்கிறோம். இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ள நேரம் முக்கியமானது. ஜெனிவாவில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் தருணத்திலேயே திட்டமிட்டு இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலாளிகள் பலமுனைகளில் சிறிலங்காவுக்கு எதிராக செயற்படுகிறார்கள். இப்போது சைபர் தாக்குதல்களையும் மேற்கொள்கின்றனர்." என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, ஊடகத்துறை அமைச்சின் இணையத்தளம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு, போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் காணொளி தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளத்தில் இணைக்கப்பட்டிருந்தது.
அத்துடன், இந்த சைபர் தாக்குதலை நடத்தியவர்கள், அப்பாவித் தமிழர்களின் கொலைகளை நிறுத்தும்படியும், அல்லது தம்மிடம் இருந்து தாக்குதல்களுக்கு தயாராகும்படியும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதேவேளை, இந்தத் தாக்குதலை நடத்தியர் தன்னை ஒரு பாகிஸ்தானியர் என்று இனங்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக