திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஜெனீவா மாநாட்டிற்கு ஆடை அணிந்து மஹிந்த சமரசிங்க செல்ல முடியுமா? - ஐ.தே.க

News Serviceஅமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆடை அணிந்து கொண்டு ஜெனீவாவிற்கு செல்ல முடியுமா என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கேள்வியெழுப்பியுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் ஏனைய சில அமைச்சர்களும் கடந்த மனித உரிமைப் பேரவை மாநாட்டில் மனித உரிமை மேம்பாடு மற்றும் நல்லாட்சி குறித்த வாக்குறுதிகளை அளித்திருந்தனர். பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்றாமல் எவ்வாறு வெட்கமின்றி ஆடை அணிந்து இம்முறை மாநாட்டில் மஹிந்த சமரசிங்க பங்கேற்க முடியும்? ஏதேனும் ஓர் காரணத்திற்காக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதன் முழுப் பொறுப்புக்களையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக