ஜெனிவா மனித உரிமை பேரவையின் 22 வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க, இன்று (27) கூட்டத் தொடரில் உரையாற்ற உள்ளார்.
இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு அமைச்சர் உரையாற்றற உள்ளதுடன், மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் இலங்கை தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தனது உரையில் பதிலளிக்க உள்ளார்.அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் ஒதுக்கி உள்ள ஆயிரத்து 200 மில்லியன் நிதி மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் தெளிவுப்படுத்த உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக