அமெரிக்கக் கடற்படையினர், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவை அழைத்தமைக்கு அமெரிக்கத் தூதரகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்கக் கடற்படையினர் விசேட சொற்பொழிவொன்றை ஆற்றுவதற்காக சவேந்திரா சில்வாவிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என்பதனையே சவேந்திர குறித்த உரையில் வலியுறுத்தியிருந்தார். எனினும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளாது கடற்படையினர், சவேந்திரவை அழைத்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக