வியாழன், 28 பிப்ரவரி, 2013

மருத்துவர் மூர்த்தி [வெண்புறா நிறுவனர்]சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த மருத்துவர் திரு. நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27 .02 .2013 அன்று சுகவீனம் காரணமாகச் பிரித்தானியா [குரோய்டன்] மருத்துவ மனையில் சாவடைந்தார்.
திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் மூர்த்தி அவர்கள் தொடக்ககாலம் முதலே எமது விடுதலைப் போராட்டத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர். 1981 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேர்ந்து தன்னாலான பங்களிப்பினை வழங்கி இயக்கத்தின் தொடக்ககால வளர்ச்சிகளில் பெரும்பங்காற்றியவர்.1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும், எமது மக்களின் ஏதிலிகள் முகாம்களிலும் மருத்துவப் பணிகளை செய்துவந்தார். கால்நடையாகவும் ஈருருளிகளிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு தனது சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார். இதே காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகமானது இந்தியாவில் 50,000 இந்திய ரூபாய் நிதியுடன் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்ககால உறுப்பினர்களுள் ஒருவராக மருத்துவர் மூர்த்தி அவர்களும் இருந்தார். இவரின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக