விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகனை இலங்கை ராணுவத்தினர் பிடித்து வைத்து, கொடூரமாக சுட்டுக் கொன்றதை பிரித்தானிய தொலைக்காட்சியான சேனல் 4 புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டது. இது தொடர்பில் இந்திய மத்திய அரசு கருத்து கூற மறுத்துவிட்டது.
புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், சம்பவம் தொடர்பான படத்தை தான் ஏற்கனவே பார்த்துவிட்டதாக கூறினார். தற்போது இதுகுறித்து கருத்து கூறுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை முக்கியமான அண்டை நாடு என்றும். போர் பற்றிய கவலையை இந்தியா ஏற்கனவே அந்த நாட்டிடம் தெரிவித்து விட்டதாகவும் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் போர் குற்றத்துக்கு மிக முக்கிய சாட்சியாக கருதப்படும் இந்த புகைப்படம் பற்றி மத்திய அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்காதது மூலம், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தன் அலட்சிய போக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போர் குற்றங்கள் புரிந்த மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு இந்திய அரசு அடிப்பணிவது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் ஐ.நா சபையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க கோரும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வர நிலையில், போர் அத்துமீறல் பிரச்சனை தீவிரம் அடைந்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக