புதன், 20 பிப்ரவரி, 2013

இத்தாலி தூதுவர் திருப்பி அழைப்பு

துர்நடத்தையால் இத்தாலி தூதுவர் திருப்பி அழைப்புஇத்தாலிக்கான இலங்கை தூதுவர் அசித்த பெரேரா உடனடியாக இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் இத்தாலி சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தூதுவர் குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தே அவர் மீள அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அசித்த பெரேரா குறித்து ரோமின் தம்மாலோக்க விகாரையின் விகாராதிபதி தம்பதெனிய தம்மாராம தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக