வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவே ஜெனீவா செல்லும்

மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவே ஜெனீவா செல்லும்மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் இலங்கை குழுவிற்கு தலைவராக இலங்கையின் மனித உரிமைகள் விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் இம்முறை ஜெனீவா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவரவுள்ளதால் இலங்கை சற்று பதற்றத்தில் உள்ளது. இதனால் இலங்கையில் இருந்து அமைச்சர்கள் எவரும் அதில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. எனினும் எவ்வாறான சவால்களையும் சந்திக்கத் தயார் என இலங்கை அரசு கூறியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக