வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

செனல்4 ஊடகத்தின் புதிய வீடியோ காட்சிகள் பொய்யானவை – கோதபாய

செனல்4 ஊடகத்தின் புதிய வீடியோ காட்சிகள் பொய்யானவை – கோதபாயசெனல்4 ஊடகத்தின் புதிய வீடியோ காட்சிகள் பொய்யானவை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் அண்மையில் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரனது மரணம் தொடர்பில் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.இராணுவ பதுங்கு குழியில் குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக எவ்வாறு செனல்4 ஊடகம் உறுதியாக கூறுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.புகைப்படத்தை வைத்துக் கொண்டு இவ்வாறான தீhமானங்களை எவ்வாறு எடுப்பது என அவர் தெரிவித்துள்ளார்.செனல்4 ஊடகத்தினர் புகைப்படங்களை திரிபுபடுத்தி இவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் புகைப்படத்தை யார் எடுத்தது எனவும், தமிழீழ விடுதலைப் புலிளினால் சிறுவர் சிறுமியர் தற்கொலைத் தாக்குதல்களுக்கு பயன்பட்டமை குறித்து ஏன் கேள்வி எழுப்பப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் காணப்பட்ட சடலங்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சில பகுதிகளுக்கு ஒரு சில தினங்களில் சென்றதாகவும், சில பகுதிகளுக்கு செல்ல ஒரு மாதம் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நந்திக்கடல் பிரதேசத்தில் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பல சடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தத்தில் உயிரிழந்த, மிகவும் தேடப்பட்டு வந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சரியான புள்ளி விபர மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பட்டுள்ளார்.
சிலர் ஒரே குற்றச்சாட்டுக்களை பல்வேறு வழிகளில் பல்வேறு விதமாக சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.2009ற்கு பின்னரும், அதற்கு முன்னரும் அரசாங்கம் ஆற்றி வரும் சேவைகளை மக்கள் அறிந்து கொண்டுள்ளதாகக குறிப்பிட்டுள்ளார்.2005 – 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 6000 படையினர் உயிரைத் தியாகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் தற்போது வீதியில் சுதந்திரமாக நடமாடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் பத்து சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். சரணடைந்த எந்தவொரு விடுதலைப் புலி உறுப்பினரையும் தண்டிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடற்புலிகளின் தளபதி சூசையின் பிள்ளைகளை இலங்கைக் கடற்படையினர் பராமரித்து வருவதாகவும், கல்வி வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் ஏற்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அ;மெரிக்கத் தூதுவருக்கு விளக்கம் அளித்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக