செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

இந்தியாவுடன் இருந்த நல்லுறவுகளை நிறுத்துவதற்கு காலம் வந்துள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்?

இந்தியாவுடன் இருந்த நல்லுறவுகளை நிறுத்துவதற்கு காலம் வந்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தனது அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர்களை அழைத்து தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் இருந்த நல்லுறவுகளை நிறுத்துவதற்கு காலம் வந்துள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்?
நேற்று மதியம் கொழும்பில் உள்ள அமைச்சர்களை அலரி மாளிகைக்கு அழைத்து ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பில் 11 அமைச்சர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

சீனா இலங்கையுடன் இருப்பதால் எதற்கும் அஞ்ச வேண்டாம் எனவும் தமது பிரதேசங்களில் இந்தியாவுக்கு எதிராக செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தான் இவ்வாறு கூறியதை அமைச்சர் தொண்டமானுக்கு கூறவேண்டாம் எனவும் அவர் இந்த கதையும் வேறு கதைகளை சேர்;த்து இந்தியாவிடம் கூறிவிடுவார் எனவும் ஜனாதிபதி அமைச்சர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பு முடிந்தவுடன் அலரி மாளிகையை விட்டு வெளியேறிய அமைச்சர் ஒருவர் தொண்டமானை தொடர்பு கொண்டு தமது தலைவர் இவ்வாறு கூறியதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் தொண்டமான், அதனை தான் அறிந்து வைத்திருந்தாக கூறியுள்ளதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக