செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பாப்ரசர் ராஜினாமா - அதிர்ச்சி அறிவிப்பு

அதி வணக்கத்திற்குரிய பாப்ரசர் 16ம் பெனடிக் ஆண்டகை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிர்ச்சி அறிவிப்பு விடுத்துள்ளார்.

85 வயதான பாப்பரசர் முதுமை அடைந்துள்ளதாகவும், தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

பாப்ரசர் ராஜினாமா - அதிர்ச்சி அறிவிப்பு2005ம் ஆண்டில் புனித 2ம் அருளப்பர் சின்னப்பர் ஜோன் போல் பாப்பாண்டவரின் மறைவைத் தொடர்ந்து, அதி வணக்கத்திற்குரிய 16 பெனடிக் பாப்ரசராக தெரிவு செய்யப்பட்டார்.

அண்மைய காலத்தில் எந்தவொரு பாப்பாண்டவரும் தனது பதவியை இராஜினாமா செய்யவில்லை எனவும், முதல் தடவையாக இவ்வாறு பதவி இராஜினாமா அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அநேக சந்தர்ப்பங்களில் பாப்பாண்டவர்கள் பதவியில் இருந்த போது இறைவனடி சேர்ந்த சம்பவங்களே பதிவாகியுள்ளன.

கார்தினலாக பதவி வகித்த ஜோசப் ராட்சின்கர் தனது 78ம் வயதில், வரலாற்றில் வயது முதிர்ந்த பாப்பரசராக நியமிக்கப்பட்டார்.

பாப்ரசர் பெனடிக், பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் என்ன செய்யப் போகின்றார் என்பது குறித்து அவரது நெருங்கிய சகாக்களுக்கு கூடத் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கத்தோலிக்க ஆயர்கள் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் அதிகளவான குற்றச்சாட்டுக்கள், பாப்பாண்டவர் 16ம் பெனடிக்கின் காலத்தில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

துரித கதியில் புதிய பாப்பரசரை நியமிக்கும் பணிகள் ஆரம்பாகும் என வத்திக்கான் அறிவித்துள்ளது.

எனினும், எப்போது கார்தினால்கள் கூடி புதிய பாப்பரசரை நியமிப்பது குறித்த வாக்கெடுப்பை நடாத்துவார்கள் என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை.

'எனது வயது தொடர்ந்தும் பாப்பாண்டவர் பதவியை வகிக்கத் தகுதியற்றது என்பது கடளின் மூலம் உணர்த்தப்பட்டது' என பாப்பாண்டவர் பெனடிக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மீகத் தொண்டை காத்திரமான முறையில் ஆற்றுவதற்கு போதியளவு உடல் தகுதி கிடையாது என பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க பாப்பாண்டவர்கள் வரலாற்றில் இதற்கு முன்னர் இவ்வாறு பதவி இராஜினாமா சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் கிடையாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Thanks - BBC

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக